» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் : உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

புதன் 14, ஆகஸ்ட் 2019 4:58:12 PM (IST)

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், முதல்வர் அறிவித்தபடி, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். குளத்தை சுத்தப்படுத்த கோரிய வழக்கில், தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுவை ஏற்க மறுத்த நீதிபதி, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது என்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது எனத் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏராளமான மக்கள் தரிசனம் செய்யாததால் பொது நலனைக் கருதி தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரினார்.

ஆனால், தரிசனம் நீட்டிக்கப்பட மாட்டாது என அறநிலைய துறை அமைச்சரே அறிவித்துள்ளதாக அரசுத்தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer EducationNalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory