» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிக்கு தமிழகஅரசு விருது : நாளை முதல்வர் வழங்குகிறார்

புதன் 14, ஆகஸ்ட் 2019 1:00:53 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகளுக்கு தமிழகஅரசு விருது நாளை வழங்கப்படுகிறது

கடையத்தை அடுத்த கல்யாணிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வரும் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் இருவர் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அரிவாளுடன் வந்து தாக்க முயன்ற கொள்ளையர்களை வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு தாக்கி முதிய தம்பதி விரட்டியடித்தனர். 

இருப்பினும் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைப் பறித்துக் கொண்டு அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். கொள்ளையர்களுடன் முதிய தம்பதி போராடிய சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில், அந்த தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகளுக்கு தமிழகஅரசு விருது நாளை வழங்கப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டத்தில், நெல்லை தம்பதி விருது பெறுகிறார்கள். சென்னையில் நடைபெறும் விழாவில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதலமைச்சர் விருது வழங்குகிறார்


மக்கள் கருத்து

ராஜாAug 14, 2019 - 08:26:42 PM | Posted IP 106.1*****

சாமி சொல்வதை செய்ங்க!

thiruAug 14, 2019 - 07:58:20 PM | Posted IP 172.6*****

நாடார் வம்சம் ....ஆண்ட வம்சம் பயம் அறியாது

சாமிAug 14, 2019 - 03:19:57 PM | Posted IP 162.1*****

தப்பி ஓடிய அந்த நாய்களை முதலில் பிடியுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory