» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் முறையீடு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 12:36:09 PM (IST)அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 31 நாட்கள் சயன கோலத்திலும், 13 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு  அருள்பாலித்து வருகிறார். கடந்த 43 நாட்களில் இதுவரை 90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று காலை தற்போது வரை 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து  சென்றுள்ளனர். மேலும், 3 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்காகக் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

அத்திவரதர் பெருவிழா தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கடந்த சனி, ஞாயிறு, பக்ரீத் எனத் தொடர்ந்து விடுமுறையாக வந்ததால் சுமார் 5 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் நிறைவுபெற உள்ளது. ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேற்று தெரிவித்தார். 

இதையடுத்து, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கவரும் நிலையில், அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீடிக்கக் கோரி மனுதாரர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory