» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிர்மலா தேவி: வழக்கு விசாரணைக்குத் தடை நீக்கம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

வெள்ளி 12, ஜூலை 2019 5:53:07 PM (IST)

உதவி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூலை 12) உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தை சேர்ந்த பலருக்குத் தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக நிர்மலா தேவி அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சிபிசிஐடி போலீசார் நியாயமாக விசாரிக்காமல் குற்றப்பத்திரிக்கையை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எனவே ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திக் குற்றப்பத்திரிகை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் இதில் இந்நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை. சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கியும் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Anbu Communications



Thoothukudi Business Directory