» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை: கிரண்பேடியின் மேல்முறையீடு தள்ளுபடி

வெள்ளி 12, ஜூலை 2019 3:31:32 PM (IST)

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண்பேடி தலையிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான கே.லட்சுமிநாராயணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், மேல்முறையீட்டு மனுக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் புதுச்சேரியில் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, கிரண்பேடி மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


மக்கள் கருத்து

நிஹாJul 13, 2019 - 10:01:26 AM | Posted IP 108.1*****

என்றைக்கு இவர் அரசியலில் இறங்கினாரோ அன்றோடு இவரது புகழ் சரிந்துவிட்டது.

ஆசீர். விJul 12, 2019 - 04:52:11 PM | Posted IP 162.1*****

இப்போவாவது இந்த அம்மையார் பணி செய்ய விடுவாரா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education
Thoothukudi Business Directory