» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை : மு.க.ஸ்டாலின் பேச்சு

வியாழன் 13, ஜூன் 2019 8:51:36 AM (IST)

தி.மு.க. எதிர்ப்பால் தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி.க்களின் உருவப் படங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இந்தியாவின் பிரதமராக மோடி 2-வது முறையாக பொறுப்பேற்றபின், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். கடந்த கால தமிழக வரலாறு மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அவர்கள் உணர்ந்து பார்க்க தவறிவிட்டனர்.

மும்மொழி திட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்ததை பார்த்தோம். அதனால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு ஊக்குவிக்காதீர்கள் என்று சொன்னேன். திருமணமான மூன்றே நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு 17-வது சட்டப்பிரிவை எரித்து கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் ராமநாதன். தமிழகத்தின் நலனுக்காக 27 முறை சிறை சென்ற செம்மல் அவர். க.ரா.சுப்பையன் எம்.பி.யாக இருந்தபோது அவரது தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தியவர். 

கிராமப்புறங்களில் கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பல சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தார். மும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் இதை பார்க்க கலைஞரும் இல்லை, அண்ணன் ராமநாதனும், க.ரா.சுப்பையனும் இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam




CSC Computer Education

Black Forest Cakes




Thoothukudi Business Directory