» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலைவாய்ப்பின்மையால் பொறியியல் படிப்பு மோகம் குறைந்தது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

செவ்வாய் 11, ஜூன் 2019 5:41:52 PM (IST)

பொறியியல் படிப்புகளுக்கான மோகம் குறைந்ததற்கு வேலைவாய்பின்மையே காரணம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக அரசு பள்ளிகளில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். நாளை மறுநாள் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். பள்ளி மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெறும் வரை பழைய பாஸ்களையே பயன்படுத்தலாம்.

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை கடந்தாண்டை விட 2 லட்சமாக அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான மோகம் குறைந்ததற்கு வேலைவாய்பின்மையே காரணம் என்று அமைச்சர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

தூத்துகுடியன்Jun 12, 2019 - 11:46:44 AM | Posted IP 162.1*****

நூறு சதவீதம் உண்மை .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes




CSC Computer Education




Thoothukudi Business Directory