» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல் நடித்த திரைப்படங்களிலும், அவரின் அரசியலிலும் நாகரிகம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

வியாழன் 16, மே 2019 5:53:55 PM (IST)

"கமல் நடித்த திரைப்படங்களிலும், அவரின் அரசியலிலும் நாகரிகம் இல்லை" என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கமல் நடித்த திரைப்படங்களிலும், அவரின் அரசியலிலும் நாகரிகம் இல்லை. யாராக இருந்தாலும் விஷ விதைகளை விதைக்கக்கூடாது.  தாம் செய்தது தவறு என கமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக் கலவரம் உருவாக வேண்டும் என நினைக்கிறார்.

அமமுகவில் சேர்ந்தவர்கள் மீண்டும் அதிமுகவில் வந்து இணைவார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. எங்களின் விருப்பமும் அதுதான். தமிழ் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் 7 பேரை விடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்" என்று கூறினார்.


மக்கள் கருத்து

Rubanமே 17, 2019 - 07:24:35 PM | Posted IP 162.1*****

நாகரீகத்தை பற்றி பேசுவது யார்? கொஞ்சம் பொறுங்கள் இன்னும் 6 நாட்கள்தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDAnbu CommunicationsThoothukudi Business Directory