» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே நாளில் பி.எட் , டெட் தேர்வு - மாணவ, மாணவிகள் அதிர்ச்சி; தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை

வியாழன் 16, மே 2019 4:45:43 PM (IST)

ஆசிரியர் தகுதித்தேர்வும், பி.எட் இறுதியாண்டு தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15 முதல்  ஏப்ரல் 5ம் தேதி வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. 8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது. 

இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்தது.  இணையதளம்  சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்தது. பி.எட் இறுதி ஆண்டு தேர்வும் அதே நாளில் வருவதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வு தேதியை மாற்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory