» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மார்ட்டின் உதவியாளர் மரணம் : விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!!

வியாழன் 16, மே 2019 4:09:34 PM (IST)

மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனையை தொடர்ந்து உதவியாளர் பழனிச்சாமி உடல் காரமடை அருகில் குட்டையில் பிணமாக மீட்கப்பட்டது. பழனிச்சாமி உடலில் ரத்த காயங்கள் இருக்கிறது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவரின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பழனிச்சாமியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று (மே 15) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக இல்லை எனக் கூறி நீதிபதிகள் மரணமடைந்த பழனிச்சாமியின் கண் விழி, நாக்கு ஆகியவை வெளியே வந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பழனிச்சாமி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மறுத்த நீதிபதிகள் மாஜிஸ்ரேட் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் மறு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட்டிடமே குடும்பத்தினர் அணுக நீதிபதிகள் அறிவுறுத்தினர். பதப்படுத்தப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலைப் பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க காவல்துறை உத்தரவிட்ட நீதிபதிகள் மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால் பழனிச்சாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors
CSC Computer Education

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory