» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ் தெரியாதவர்களை தமிழக ரயில்வேயில் பணியமர்த்த தடை கோரி வழக்கு

வியாழன் 16, மே 2019 10:52:46 AM (IST)

தமிழகத்தில் ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்துவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த மணவாளன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், அண்மையில் மதுரை கள்ளிக்குடி ரயில்வே பாதையில் தமிழ் தெரியாத வடமாநிலத்தை செர்ந்த ஸ்டேஷன் மாஸ்டரால் நடக்கவிருந்த பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு ரயில்வே நிர்வாகம் சில மாறுதல்களை கொண்டுவர வேண்டியதின் அவசியத்தை கொணருவதாக உள்ளது. பெரும்பாலும் ரயில்வே தேர்வுகள் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியிலேயே எழுதப்படுகிறது எனவே வடமாநிலத்தை சேர்ந்தவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். 

தமிழகத்தில் பணியாற்றும் மொத்த ரயில்வே ஊழியர்களில் 15 முதல் 20 சதவிகித ரயில்வே ஊழியர்கள் தமிழ் தெரியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பாக லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் என முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு தமிழ்மொழி தெரிவதில்லை இதனால்தான் மதுரையில் இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது எனவே தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நிஷாபானு தாண்டபானி அமர்வு இதுகுறித்து தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து

நிஹாமே 16, 2019 - 01:01:34 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பியூன் முதற்கொண்டு கமிஷனர் வரை 90 %க்கும் மேல் தமிழர் அல்லாதோர் உள்ளனர். இது போல இன்னும் பல துறைகள் உள்ளன.

எஸ் kayமே 16, 2019 - 11:31:45 AM | Posted IP 162.1*****

20 சதவீதம் அல்ல அதற்கும் மேல உள்ளனர் Good Job done by Mr.Manavalan . congrats for his efforts .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory