» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்ச்சை பேச்சு... நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி!!

திங்கள் 25, மார்ச் 2019 4:59:31 PM (IST)

சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை திமுகவில் இருந்து நீக்கிய ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை: நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வதான கருத்துகளால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரும் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் பிறந்தார் என்பதை ராதாரவி உள்ளிட்ட அவரைப் போன்றவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகராக இவர் மற்ற இளம் தலைமுறையினருக்கு  முன்னுதாரணமாக, வழிகாட்டுபவராக திகழ வேண்டும். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

சரியான பட வாய்ப்பு இல்லாததால், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைய முயற்சிக்கிறார் ராதாரவி. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது தான். ராதாரவி போன்ற பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை பொதுமக்களும், ரசிகர்களும் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது கோரிக்கை. ராதாரவியின் இத்தகைய கேவலமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனது ரசிகர்களுக்காக நான் என்னால் முடிந்த வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இனியும் நடிப்பேன். கடைசியாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடிகர் சங்கத்தில், விசாகா வழிகாட்டு முறையின் அடிப்படையில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது பணிவான கேள்வி. எனக்கு துணையாக நின்ற, நிற்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிMar 30, 2019 - 10:11:13 AM | Posted IP 172.6*****

உனக்காக - எல்லாம் உனக்காக - இது எல்லாம் என் இனிய உதயநிதிக்காக

உண்மை தான்Mar 25, 2019 - 06:03:28 PM | Posted IP 162.1*****

ராதாரவி கூறுவது தப்பில்லை . அன்று காசுக்காக பிரபுதேவா கூட வெளிநாட்டில் ஊர் சுற்றுவா , சிம்பு கூட வெளிநாட்டில் ஊர் சுற்றுவா , இன்று வேற யாரோ கூட ஊர் சுற்றுவா .. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Anbu Communications

CSC Computer Education



Thoothukudi Business Directory