» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயம் காரணமாக தேர்தலில் கமல் போட்டியிடவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திங்கள் 25, மார்ச் 2019 4:46:14 PM (IST)

பயம் காரணமாக தேர்தலில் கமல் போட்டியிடவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். 

மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் தலைவர் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஒரு தொகுதியில் மட்டும் முடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே தாம் போட்டியிடவில்லை என விளக்கமளித்தார். இதனிடையே கமல் தேர்தலில் போட்டியிடாததை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புழுவை விட்டு மீனை பிடிப்பதை போல புதிய நபர்களை இறக்கியுள்ளார் கமல். பயம் ஏற்பட்டதால் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை. ஈபிஎஸ், ஓபிஎஸ் சொன்னது போல் தேர்தல் பணி செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்றார். 


மக்கள் கருத்து

ஆசீர். விMar 26, 2019 - 10:29:46 AM | Posted IP 162.1*****

ப்ரோக்கர் என்பவர் ஒரு இடத்தில நிலையாக இருக்கமாட்டார். எங்கே வியாபாரம் நடக்குமோ அங்கே இருப்பர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory