» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக - பாமக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை : திருமாவளவன் கருத்து

செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:32:15 PM (IST)

தமிழகத்தில் அதிமுக - பாமக கூட்டணி அமைத்திருப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை இரு கட்சித் தலைவர்களும் இன்று கூட்டாக வெளியிட்டனர். இந்தக் கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக கூட்டணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவது திமுக கூட்டணிக்கு சாதகம்.மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களின் மனநிலை தமிழகத்தில் வலுவாக உள்ளது. அதிமுகவின் மெகா கூட்டணி என்பது வெற்றிக்கான மாயையாகவேக் கருதப்படுகிறது. இதற்கு முன் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்த போது பாமக முழுத் தோல்வி கண்டது. பாமக கொள்கையில்லாத, பேரம் பேசும் கட்சி என்பது தெரிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அக்கட்சியையே விலக்கி வைத்திருந்தார் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிFeb 19, 2019 - 06:33:17 PM | Posted IP 172.6*****

ஓட்டு மோடிக்குதான் - கேடிகளுக்கு அல்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Anbu Communications



CSC Computer Education

Black Forest Cakes



Thoothukudi Business Directory