» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற அரசுக்கு பரிந்துரை: அமைச்சர் உதயகுமார்

வியாழன் 17, ஜனவரி 2019 12:08:26 PM (IST)

மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்போம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டிகள், தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்றாலும், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாக உள்ளது. அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வியாழக்கிழமை (ஜனவரி 17) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாலை 4 மணிவரை நடைபெறும் இந்த போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,400 காளைகளும், 849 காளையர்களும் களத்தில் உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்ற ஆண்டு போராட்டத்திற்கு பின் முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நினைவாக கல்வெட்டு அமைக்கப்படும். நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இதுகுறித்து முதல்வருக்கும் பரிந்துரை செய்யப்படும். ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசுக்கு எடுத்துரைப்போம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


New Shape Tailors

Joseph Marketing

CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory