» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி லாட்ஜில் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி: பெண் பலி - வாலிபர் சீரியஸ்

புதன் 16, ஜனவரி 2019 9:06:20 PM (IST)

கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்தனர். இதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் காவல் நிலையம் அருகே ஒரு லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி காலை 7 மணி அளவில் இந்த லாட்ஜிக்கு இளம்பெண் ஒருவருடன் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தாங்கள் கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகவும், சில நாட்கள் இங்கு தங்கி இருக்க போவதால் தங்களுக்கு லாட்ஜ்யில் ரூம் வேண்டும் என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு லாட்ஜ்யில் ரூம் ஒதுக்கப்பட்டது. அந்த ஜோடியிடம் இருந்து முகவரி சான்றாக ஆதார் அட்டையின் நகலும் வாங்கப்பட்டது.

தினமும் காலையில் லாட்ஜ்யில் இருந்து புறப்படும் அந்த ஜோடி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இரவு மீண்டும் லாட்ஜிக்கு திரும்பி விடுவார்கள்.இந்த நிலையில் நேற்றும் காலையில் அவர்கள் இருவரும் வழக்கம் போல வெளியில் சென்று விட்டு இரவு தாங்கள் தங்கி இருந்த லாட்ஜிக்கு திரும்பினார்கள். இன்று காலையில் லாட்ஜ் ஊழியர்கள் அங்கு தங்கி இருப்பவர்களின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவு தேவையா? என்பது பற்றி கேட்டனர்.

இந்த ஜோடி தங்கி இருந்த அறை கதவை தட்டிய போது திறக்கப்படவில்லை. அதே சமயம் அறை உள்ளே இருந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டது.  இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்துச் சென்றனர். அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளேச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு அந்த வாலிபர் கையில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருடன் தங்கி இருந்த இளம்பெண் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக அந்த வாலிபரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அந்த பெண்ணின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

அந்த வாலிபர் பெயர் சதீஷ் (27), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருடன் தங்கி இருந்த பெண்ணின் பெயர் கார்த்திகா(24). கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்தூர். இவருக்கு திருமணமாகி விட்டது. சதீஷ் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கார்த்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலைக்குச் செல்லும் போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இவர்களது கள்ளக்காதல் உறவினர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்யும் எண்ணத்துடன் கன்னியாகுமரிக்கு வந்தனர். இங்கு பல இடங்களையும் சுற்றிப்பார்த்த அவர்கள் லாட்ஜியில் வைத்து வி‌ஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். இதில் கார்த்திகா இறந்து விட்டார். சதீஷ்சுக்கு வாந்தி ஏற்பட்டதால் அவர் சாப்பிட்ட வி‌ஷ மாத்திரையில் இருந்து தப்பி விட்டார். ஆனாலும் கள்ளக்காதலி இறந்த பிறகு தான் உயிர் வாழக்கூடாது என்பதற்காக கத்தியால் கையை அறுத்து உள்ளார். அதற்குள் போலீஸ் வந்து அவரை காப்பாற்றி உள்ளனர். இது பற்றி சதீஷ் மற்றும் கார்திகாவின் பெற்றோர், உறவினர்களுக்கு கன்னியாகுமரி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Joseph Marketing

Black Forest Cakes

CSC Computer Education

New Shape Tailors

Anbu CommunicationsThoothukudi Business Directory