» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோடநாடு ஆவணப்படம் : தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்கு

சனி 12, ஜனவரி 2019 4:57:27 PM (IST)

கோடநாடு கொலை, கொள்ளை பற்றிய வீடியோ வெளியிட்ட தெகல்கா இணையத்தள முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின், சைபர் கிரைம் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர் . ஆவணப்படத்தில் பேட்டியளித்த மனோஜ், சயான் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று இந்த ஆவணப்படத்தை மேத்யூஸ் வெளியிட்டார். 

அதில் கோடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் பலவற்றை எடுப்பதற்காக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் என்பவர் கேரளாவிலிருந்து கொள்ளையர்களை அழைத்து வந்து கொள்ளை நடத்தியதாகவும், அந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் வரிசையாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes






Thoothukudi Business Directory