» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜி.எஸ்.டி.எண் இல்லாமல் பொருட்கள் விற்பனை ? திருநெல்வேலியில் வழக்கறிஞர் புகார்

திங்கள் 12, நவம்பர் 2018 8:07:38 PM (IST)

ஜி.எஸ்.டி.எண் இல்லாமலே, பொருளுக்கான தொகையையும், அதற்கு உண்டான வரி தொகையையும் பெற்றுக் கொண்டு பொருட்கள் விற்பனை செய்ததாக நெல்லை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி.க்காக வழக்கு பதிவாகியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டை கடந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சென்னல்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் வேல்முருகன், நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்படும் தனியார் கம்பெனியில் ஆஸ்பெட்டாஸ் சீட் போன்ற பொருட்கள் வாங்கியதில் பில்லில் ஜி.எஸ்.டி எண் இல்லாமல் அதற்கான பணத்தை எடுத்து கொண்டதாக புகார் கொடுத்ததின் அடிப்படையில் நெல்லை பெருமாள்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர். 

இது குறித்து வழக்கறிஞர் வேல்முருகன் பெருமாள்புரம் போலீசில் அளித்த புகாரில், வீட்டின் கட்டுமானத் தேவைக்காக 5 ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளும், பைப் உள்ளிட்ட இதர சில்லறை சாமான்களையும் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள இரும்பு வணிகம் செய்யும் கடையில் கடந்த சனிக்கிழமையன்று மாலை வேளையில் ரூ.14,800 கொடுத்து வாங்கியதாகவும் சாமான்களை எடுத்து செல்லும் வழியில் விற்பனை வரித்துறையினர் வந்துவிட்டால் ரூ.9410க்கு ஒரு பில்லையும், நாங்கள் கொடுத்த மொத்த தொகைக்காக தனியாக ரூ.8670, ரூ.6130க்கு என இரு பில்லைக் கடைக்காரர்கள் கொடுத்தார்கள். 

எதற்கு தேவையில்லாமல் இத்தனை பில்கள் ஜி.எஸ்.டி.எண் இல்லாமலே வரி போட்டிருக்கிறீர்கள். நாங்கள் கொடுத்தது ரூ.14800. அதற்குண்டான தொகைக்கு ஒரே பில்லைக் கொடுங்கள். எனக் கேள்வி கேட்டதற்கு நாங்கள் வழக்கமாக அப்படித் தான் கொடுப்போம். என மிரட்டும் தொனியில் பேசினார்கள் என மனுவில் கூறியுள்ளார். இந்த புகாரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

New Shape Tailors

Joseph Marketing

Nalam Pasumaiyagam

Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory