» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவினருக்கு அரிவாளைக் கொண்டு கொலை மிரட்டல்: விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது புகார்!

திங்கள் 12, நவம்பர் 2018 5:00:44 PM (IST)

விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு கையில் அரிவாளை வைத்தபடி அதிமுகவினருக்குச் சமூகவலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. 

இந்நிலையில் சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த சமயத்தில், விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு கையில் அரிவாளை வைத்துக்கொண்டு இரு இளைஞர்கள் அதிமுகவினருக்கு விடியோ வழியாக மிரட்டல் விடுத்தார்கள் இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. ஆளில்லாத சமயத்தில், பேனர்களைக் கிழித்துள்ளீர்கள். மொத்த விஜய் ரசிகர்களும் ஒன்று சேர்ந்தால், அதிமுக-வில் ஒருவரும் உயிருடன் இருக்கமாட்டீர்கள்.இப்போதும் எங்களால் உங்களை வெட்ட முடியும். ஆனால் விஜய் ரசிகர்கள் இப்படிச் செய்தார்கள் என அவருடைய பெயர் கெட்டு விடும். இதனால், அடங்கிப் போகிறோம் என்று அந்தக் காணொளியில் பேசியிருந்தார்கள். 

இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரகாஷ் என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.  இதையடுத்து, விஜய் ரசிகர்கள் என கூறிக் கொண்டு அரிவாளுடன் சமூகவலைதளத்தில் விடியோ வெளியிட்ட 2 பேர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் 044 - 23452348, 23452350 ஆகிய எண்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Black Forest Cakes
CSC Computer Education

Nalam Pasumaiyagam


Joseph Marketing

Anbu CommunicationsThoothukudi Business Directory