» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து மனு தள்ளுபடி

வெள்ளி 9, நவம்பர் 2018 2:18:06 PM (IST)

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட பாண்டியராஜன், 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

அதில், தனக்கெதிரான குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என கூறப்பட்டுள்ளது.தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிபதி முரளிதரன், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


CSC Computer Education



Joseph Marketing


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory