» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்களின் மனு தள்ளுபடி

வெள்ளி 9, நவம்பர் 2018 1:34:40 PM (IST)

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய மாறன் சகோதரர்கள் அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மாறன் சகோதரர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தவிர, குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்யவும் உத்தரவிட்டனர். காங்கிரஸ் ஆட்சியின் போது திமுகவை சேர்ந்த திமுக.,வின் தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். இந்நிலையில் சென்னை போட் கிளப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்து, அதன்மூலம் தனது சகோதரர் நிறுவனமான டிவி நிறுவனத்துக்கு உபயோகப்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த வழக்கில், இதற்கு ஆதாரமில்லை என மாறன் சகோதரர்கள் உட்பட அனைவரும், விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் , மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரும் மீண்டும் வழக்கை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த விசாரணை தொடர்ந்து நடக்கும், என சிபிஐ நீதிமன்றம் அறிவித்த நிலையில், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மாறன் சகோதரர்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மாறன் சகோதரர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தவிர, குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்யவும் உத்தரவிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


CSC Computer Education



New Shape Tailors

Joseph Marketing

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory