» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்ஜாமீன் கோரி இயக்குநர் முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

வெள்ளி 9, நவம்பர் 2018 1:21:13 PM (IST)

சர்கார் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருக்கும் விவகாரத்தில், இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, சர்கார் சர்ச்சை தொடர்பான புகாரின் அடிப்படையில் முருகதாசை போலீசார் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் அளிக்குமாறு கோரினார். 

நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறும் முறையிடப்பட்டது. இதையடுத்து, இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்யுமாறும், நேரம் இருந்தால் மனுவை இறுதி வழக்காக விசாரணைக்கு எடுப்பதாகவும் நீதிபதி அனுமதித்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

New Shape Tailors



Anbu Communications

CSC Computer Education

Joseph Marketing

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory