» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும் : வானிலை மையம்

வியாழன் 18, அக்டோபர் 2018 2:06:36 PM (IST)

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவைக்கான மழை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது:-வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். 

ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வரும் 20ம் தேதியுடன் தெற்மேற்கு பருவமழை முடிகிறது. அதே 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமாக சூழ்நிலை உருவாகும். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

New Shape Tailors

crescentopticals


CSC Computer Education



Thoothukudi Business Directory