» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரை : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்

புதன் 10, அக்டோபர் 2018 1:23:55 PM (IST)


தாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரையை மதுரையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்.

தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்கள் மதுரையில் இருந்து இன்று திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்களின் ரதயாத்திரையை பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து ஹெச்.ராஜா பேசுகையில், தாமிரபரணி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை நடைபெற்ற புஷ்கர விழாவில் அப்போதைய சபாநாயகா் ஆவுடையப்பன் கலந்து கொண்டாா். ஆனால் புஷ்கர விழாவிற்கு திடீரென்று சிலா் எதிா்ப்பு தொிவிக்கின்றனா். ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகம் வந்தபோது எதிா்ப்பு நிலவியது போல் இப்போதும் எதிா்க்கிறாா்கள் என்று அவா் தொிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து

சாமிOct 12, 2018 - 02:02:05 PM | Posted IP 141.1*****

நல்ல ஒரு எழுச்சி - சபாஷ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam


New Shape Tailors

CSC Computer EducationThoothukudi Business Directory