» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்

வியாழன் 13, செப்டம்பர் 2018 1:16:59 PM (IST)

மறைந்த பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பேரறிவாற்றலுடன் தனித்துவமிக்க தலைவராக விளங்கிய அண்ணா, திராவிட தலைவர்களிலேயே உயர்ந்தவராக திகழ்வதாக முதல்வர் கூறியுள்ளார். கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை இயற்றிய தீர்மானத்தை ஏற்று, பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். 

இதேபோன்று, எம்ஜிஆர்-ன் 100ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்றும், இதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 13, 2018 - 01:58:18 PM | Posted IP 141.1*****

A1 குற்றவாளிக்கு பாரத ரத்னா விருது கேட்டதற்காகவே இந்த அரசை ஆளுநர் கலைக்கலாம். குற்றவாளியுடன் தொடர்பு வைத்து இருப்பது தப்பு தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications



Thoothukudi Business Directory