» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை: செல்லூர் ராஜூவுடன் சந்திப்பு குறித்து மு.க அழகிரி பேட்டி

வியாழன் 13, செப்டம்பர் 2018 11:57:11 AM (IST)

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி சந்தித்து பேசினார்.

மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90). அண்மையில் காலமானார். இந்த நிலையில், இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்திற்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, செல்லூர் ராஜூவின் தாயார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

சிறிது நேரம் செல்லூர் ராஜுவிடம் பேசிக்கொண்டு இருந்த மு.க அழகிரி, பின்னர் அங்கிருந்து கிளம்பிச்சென்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி, நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை. செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே வந்தேன்” என கூறிவிட்டு சென்றார். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 13, 2018 - 12:49:43 PM | Posted IP 141.1*****

நாங்க ஒண்ணுமே நினைக்கவே இல்லையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals




Thoothukudi Business Directory