» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடிபழனிசாமி இரங்கல்

வியாழன் 12, ஜூலை 2018 1:28:38 PM (IST)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீராமனுஜ மடத்தின் ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஈபிஎஸ் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக இருந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள்  உடல்நலக் குறைவால் ஆசார்யன் திருவடியை அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், கோயம்புத்தூர் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அர்ச்சகராக தனது ஆன்மிகப் பணியை தொடங்கி, 60-வது வயதில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக பொறுப்பேற்று, அரங்கனின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கைங்கர்யங்களை செய்தவர்.அவரை இழந்து வாடும் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் சிஷ்ய கோடிகளுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத் தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயரின் ஆன்மா ஆசார்யன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors



Joseph Marketing





Thoothukudi Business Directory