» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎல் தொடரில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதன் 11, ஜூலை 2018 3:29:56 PM (IST)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தொடரில் இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2 வீரர்களை சேர்த்துக்கொள்ள கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு பிசிசிஐ நிர்வாகக் குழு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிமாநில வீரர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த முடிவை எதிர்த்து டிஎன்பிஎல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வெளிமாநில கிரிக்கெட் சங்கங்களில் இடம்பெற்றுள்ள வீரர்கள், அந்தந்த சங்கங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கொடுத்தால் டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று டிஎன்பிஎல் வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு பிசிசிஐ வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், டிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதி அளிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தன
மக்கள் கருத்து
உண்மை சொல்பவன்Jul 11, 2018 - 05:06:31 PM | Posted IP 162.1*****
நாட்டுக்கு கிரிக்கெட் தேவையில்லாதது .. எல்லாம் பயித்தியம், சூதாட்டம்தான்
மேலும் தொடரும் செய்திகள்

மலேசியாவில் தவித்த 49 தமிழர்களை மீட்க உதவி : கனிமொழிக்கு கிராமமக்கள் நன்றி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 8:11:44 PM (IST)

தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது : நெல்லையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:50:03 PM (IST)

பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக தீர்ப்பு எதிரொலி: ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:49:24 PM (IST)

ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு அரசின் வாதத்திறமையே காரணம்; வைகோ அல்ல: அமைச்சர் கருப்பண்ணன்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:44:15 PM (IST)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:27:38 PM (IST)

அதிமுக - பாமக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை : திருமாவளவன் கருத்து
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:32:15 PM (IST)

மனிதன்Jul 11, 2018 - 07:31:02 PM | Posted IP 172.6*****