» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அருகே கள்ள நோட்டு கும்பல் கைது : 1.73 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

ஞாயிறு 24, ஜூன் 2018 11:59:57 AM (IST)

நெல்லையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயற்சி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு கும்பல், நல்ல நோட்டுக்களை பெற்றுக் கொண்டு இரு மடங்கு கள்ள நோட்டுக்களை கொடுத்து வரும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து சங்கரன்கோவில் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர்.இந்தநிலையில், சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் இன்று கள்ள நோட்டுக் கும்பல் பணத்தை மாற்றப் போகும் தகவல் கிடைத்ததால், அந்த லாட்ஜில் போலீஸார் மஃப்டியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். மாலை நேரத்தில் ஒரு ஆம்னி வேனில் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் அறைக்குள் சென்றதும் போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் பிடிபட்டவர்கள், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், சண்முகம், சங்கர் கணேஷ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.1.73 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு க்களும் ஆம்னி வேனும் கைப்பற்றப்பட்டன. மூவரும் அந்த லாட்ஜில் தங்கியிருந்த அசன் என்பவருக்கு பணத்தைக் கொடுக்க வந்த விவரம் தெரிய வந்தது. காவல்துறையினர் குறித்த விவரம் தெரிந்ததும் அசன் தப்பியோடி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing
crescentopticals
Thoothukudi Business Directory