» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி என்று கூறினால் பேரவையில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை : ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதன் 13, ஜூன் 2018 6:53:20 PM (IST)

தூத்துக்குடி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைப்ப தில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விழாவில் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் தினசரி ஏதாவது ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்து வருகின்றன.இந்நிலையில் கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,தற்போது அரசு ஊழியர்கள், நீட், ஸ்டெர்லைட் போராட்டம் என பலவித போராட்டங்களால்  தமிழகம் போராட்டக் களமாக மாறி வருகிறது.

அதிலும் துாத்துக்குடி துப்பாக்கிசூடு பிரச்சனை குறித்து சட்டபேரவையில் பேச முடிவதில்லை.தூத்துக்குடி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. மத்தியில் பாஜக மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


மக்கள் கருத்து

சேவுகப்பாண்டியன்Jun 13, 2018 - 10:49:18 PM | Posted IP 37.21*****

பேசினாப்ல என்ன நடந்துரப்போகுது? 89 எம் எல் எ வை கைலவச்சுக்கிட்டு நாக்குவழிக்காவா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD






crescentopticals

Joseph Marketing

New Shape Tailors




Thoothukudi Business Directory