» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 2,000 புதிய பேருந்துகள் கொள்முதல்: முதல்வர் ஆய்வு

வியாழன் 17, மே 2018 10:44:39 AM (IST)நவீன வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2,000 பேருந்துகளில் சிலவற்றை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். புதிய பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

தமிழ்நாடுஅரசுப் போக்குவரத்து கழகத்துக்காக வடிவமைக்கப்பட்ட புதிய பேருந்துகளை தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து முதல்வருக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் விளக்கினர்.  புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் வசதி, சிசிடிவி கேமரா, தீ அணைப்பான் உள்ளிட்ட நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பேருந்துகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். 

மது அருந்தியிருந்தால்: 

புதிய பேருந்துகளின் கூடுதல் சிறப்பு அம்சம் என்பது, மதுபோதையில் வாகனங்களை இயக்க முடியாது என்பதுதான். இதற்கான புதிய வகை கருவி ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவியில் இருக்கும் குழாயின் வழியாக காற்றை ஊத வேண்டும். ஓட்டுநர் மது அருந்தியிருந்தால் வாகனம் இயங்காது. மது வாசம் இல்லாவிட்டால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும். மேலும், வாகன சக்கரங்களின் காற்றழுத்தத்தை கண்டறியும் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

காற்றின் அளவு குறைந்தால் அதை எச்சரிக்கும் கருவி ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே பொருத்தப்பட்டிருக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.தூங்கும் வசதி கொண்ட பேருந்துகள், கழிவறை வசதிகள் கொண்ட பேருந்துகள், குளிர் சாதனப் பேருந்துகள் என தனியார் பேருந்துகளுக்கு நிகராக புதிய ரக பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

New Shape Tailors

Thoothukudi Business Directory