» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல்

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 1:35:03 PM (IST)

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி, பல்கலைக்கழகத்தில் உயர திகாரி களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்துவது மற்றும் தவறாக வழிநடத்துவது தொடர்பான ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.இந்த ஆடியோ காட்சி மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் தகவல்கள் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Joseph Marketing

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education

Anbu Communications




Thoothukudi Business Directory