» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் சார்பில் பணம் கொடுக்க முயன்றது யார்? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஜெயக்குமார் கேள்வி

திங்கள் 16, ஏப்ரல் 2018 5:28:53 PM (IST)

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பணம் கொடுக்க முயன்றது யார்? என்பது குறித்தும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூற வேண்டும் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : "அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூயில் மாணவிகளை பாலியல் தேவைக்கு இணங்க வற்புறுத்திய பேராசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடித் தடைக்கால நிதி மீனவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை தனக்கு பணம் கொடுக்க முயன்றதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எந்தவித தகவல்களும் இன்றி பொத்தம்பொதுவாக புகார் கூறியிருக்கிறார். யார் பணம் கொடுக்க முயன்றனர்? எப்போது, எங்கே பணம் கொடுக்க முயன்றனர்? என்பது குறித்தும் மத்திய அமைச்சர் கூற வேண்டியது அவரின் கடமை. இதனைப் புரிந்துகொண்டு மத்திய அமைச்சர் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவை கைது செய்து விசாரிக்க வேண்டும். அதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் ராமமோகனராவ் செயல்பட்டார். சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

வழுக்கை இல்லநிருApr 17, 2018 - 11:45:36 AM | Posted IP 172.6*****

சும்மா .........................

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Joseph Marketing




Anbu Communications




Thoothukudi Business Directory