» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூரில் தமிழ் புத்தாண்டு விழா : ரூ20லட்சம் நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்

சனி 14, ஏப்ரல் 2018 7:04:26 PM (IST)



தமிழ் புத்தாண்டு விழாவையொட்டி ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ரூ20லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் விளம்பி தமிழ் புத்தாண்டு கொன்டாடப்பட்டது. அதிகாலை 3மணிக்கு மங்கல இசையுடன் கருவறையில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10.45மணிக்கு சித்தர் பீடம் வருகை தந்த ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு காஞ்சிபுரம் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப. செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

தமிழ்புத்தாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஆன்மிககுரு அருள்திரு பங்காரு  அடிகளார் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கொண்டாரெட்டியார் அனைவரையும் வரவேற்றார். ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கி பேருரை ஆற்றினார். மூத்த வழக்கறிஞர்கள் ரகுவீர், கிருஷ்ணன், தொழிலதிபர் சாய்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை மருத்துவம் குறித்த அன்னையின் முத்தான அருள்வாக்குகள் என்ற கையடக்க தமிழ் பதிப்பு புத்தகத்தை ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் வெளியிட லட்சுமி பங்காரு அடிகளார் பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து 11 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களையும், 4 தம்பதியர்களுக்கு மணி விழாக்களையும் அருள்திரு அடிகளார் நடத்தி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவிகள், நாவிதர் கருவி, எரிவயு அடுப்புக்கள், பாத்திரங்கள், விவசாய கருவிகள், தையல் இயந்திரங்கள், சலைவைப்பெட்டிகள், 36பேருக்கு மிதி வண்டிகள் ஏழை மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை உட்பட ரூ.20லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அருள்திரு பங்காரு அடிகளார் வழங்கினார்.



முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை இயற்கை சீற்றம் தணியவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்விபூஜை  நடைபெற்றது.  விழாவில், ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.அன்ப்ழகன், ப.ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education



Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory