» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள்: நாஞ்சில் சம்பத்

ஞாயிறு 18, மார்ச் 2018 10:18:18 PM (IST)

ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன்  அணியினர் மீது  நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்..

அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் டி.டி.வி.தினகரன் மதுரையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற புதிய அமைப்பைத் துவக்கி, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமையன்று பெயரிலேயே அண்ணா மற்றும் திராவிடம் இரண்டையும் கைவிட்ட  டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். அத்துடன் இனி இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். இலக்கிய மேடைகளில் என்னை அதிகம் பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல தினகரன் அணியில் என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன்  அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன். தோள் கொடுத்தேன். அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்ட பொழுது அவருக்கு பக்கபலமாகவும்,  தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன். அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNew Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

crescentopticals
Thoothukudi Business Directory