» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி : மருத்துவமனையில் அனுமதி

ஞாயிறு 18, மார்ச் 2018 9:25:47 AM (IST)

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசிகலாவின் கணவர் ம.நடராஜன்,  கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதையடுத்து உடல்நலன் தேறினார்.

ஒரே மாதத்தில் நடராஜன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் தான் வழக்கமாக வசிக்கும் வீட்டில் இருக்காமல், உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார் நடராஜன். இந்நிலையில் திடீரென ம. நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Joseph Marketing

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory