» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒலிப் பெருக்கியுடன் பிறந்த வைகோ, வீரவசனம் பேசுவதில் வல்லவர் : அமைச்சர் ஜெயக்குமார்

செவ்வாய் 13, மார்ச் 2018 12:31:12 PM (IST)

பிறக்கும்போதே ஒலிப் பெருக்கியுடன் பிறந்தவர் வைகோ என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியளார்களிடம் கூறுகையில், சாதிரீதியான கேள்விகளை பள்ளிப்பருவத்தில் திணிப்பதை ஏற்கமுடியாது. பள்ளிக் கல்வித்துறை இந்த விவகாரத்தை கவனித்து கொள்ளும். குற்றப்பின்னணி கொண்ட யாரும் அதிமுகவில் கிடையாது.பிற கட்சிகளில்தான் சுற்றுலாவை மேம்படுத்தும் மலையேற்ற பயிற்சிக்கு தடைவிதிக்க முடியாது. மலையேற்ற பயிற்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 

தினகரன் உட்பட யாரும் கட்சி தொடங்கலாம், அதிமுகவுக்கு பாதிப்பில்லை. ஆனால் அதிமுகவின் கட்சி கொடியையும், சின்னத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. புயல் குறித்த தகவலை அறியாத மீனவர்களுக்கு விமானம் மூலமாக தகவல் வழங்கி வருகிறோம். பிறக்கும்போதே ஒலிப் பெருக்கியுடன் பிறந்தவர் வைகோ, அவர் வீரவசனம் பேசுவதில் வல்லவர். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஊடகங்களில் பேசுவதை ஜெயக்குமார் குறைத்து கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

மக்களின் ஒருவன்Mar 13, 2018 - 06:32:40 PM | Posted IP 103.2*****

குக்கர் மண்டையன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Anbu Communications


New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory