» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜனநாயகத்தைக் காப்போம்; இருளுக்குப்பின் வெளிச்சம் வந்தே தீரும்: வைகோ பொங்கல் வாழ்த்து

சனி 13, ஜனவரி 2018 11:56:52 AM (IST)

ஜனநாயகத்தைக் காக்க தமிழக மக்கள் உறுதிகொள்ள வேண்டும். இருளுக்குப்பின் வெளிச்சம் வந்தே தீரும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் : பன்னெடுங்காலமாகத் தமிழர்கள் இயற்கையை வழிபட்டு, பயிர் வளர்த்துத் தானிய மணிகளைத் தரும் நிலத்திற்குப் பெருமை சேர்த்து, கோழைபடாத மேழிச்செல்வமான, தங்கள் இல்லத்துப் பிள்ளைகளைப் போல அன்புடன் பராமரிக்கும் எருதுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, ஆவினங்களுக்குப் படையல் இட்டு, நெல்மணிகள் தந்த அரிசியை, கன்னல் தந்த சர்க்கரையோடு கலந்து, தித்திக்கும் பொங்கலாய் இல்லத்தில் அனைவரும் உண்டு மகிழ்ந்து, ஏறு தழுவுதல் என்ற மரபு வழி வீர விளையாட்டை, சீறி வரும் கhளைகளின் திமிலை, காளையர்கள் கரங்களை அணைத்து, இயற்கைக்கு ஆராதனை செய்வதுதான் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஆகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உழவர் பெருங்குடி மக்களின் வாழ்க்கை கண்ணீர் வெள்ளம் ஆயிற்று.உழுது பயிரிட்டு உலகத்திற்கு உணவு அளித்த விவசாயிகளின் விம்மல்கள் தணியவில்லை; பெருகிற்று. இன்று தமிழ்நாட்டின் நிலையைச் சிந்திக்கும்போதே நெஞ்சம் கலங்குகின்றது. வெள்ளத்தால் புரண்டோடி வந்த நதிகளின் வெள்ளத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த தண்ணீர் உரிமையை, அண்டை மாநிலங்கள் தடுக்கின்றன. மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கே துரோகம் இழைக்கிறது. மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கhர்பன், நியூட்ரினோ திட்டங்களை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுற்றுச் சூழலையும் அடியோடு நாசமாக்க மத்திய அரசு முனைந்துவிட்டது. 

மாநில நலனையும், உரிமைகளையும் காக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசினுடைய ஆணைகளுக்கு அஞ்சி கட்டுப்பட்டு கடமை தவறும் அவலநிலை ஏற்பட்டுவிட்டது. எத்தனை சோதனைகள், வேதனைகள் சூழ்ந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு தமிழ்நாட்டின் நலன்களைக் காக்கவும், பணநாயகத்திலிருந்து விடுவித்து, ஜனநாயகத்தைக் காக்கவும் தமிழக மக்கள் உறுதிகொள்ள வேண்டும். இருளுக்குப்பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


crescentopticals






Thoothukudi Business Directory