» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவியிடம் போலீஸ்காரர் அத்துமீறல் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சனி 21, அக்டோபர் 2017 8:31:29 PM (IST)

திருச்சியில் இருந்து நேற்று நாமக்கல் சென்ற அரசு பஸ்சில் நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரும் பயணம் செய்தார். அதே பஸ் சில் முசிறி காவல் நிலையத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியாற்றும் திருச்சி பகுதியை சேர்ந்த போலீஸ் டிரைவர் ஒருவரும் வந்துள்ளார்.

பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்த நிலையிலும் அந்த போலீஸ்கார‌ர் மாணவி அமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி அழுது கொண்டு இருக்கையிலிருந்து எழுந்து வேறு இடத்துக்கு செல்ல முயன்றார். ஆனால் தான் போலீஸ் என்றும், இருக்கையை விட்டு எழுந்திருக்கக்கூடாது என்றும் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் மாணவியை மிரட்டினார். இதனால் மாணவி அதே இருக்கையில் அமர்ந்து உள்ளார். மாணவியிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்த போலீஸ்காரர் முசிறி வந்தவுடன் இறங்கி போய்விட்டார்.

நாமக்கல் சென்று கொண்டிருந்த மாணவி தொடடியம் அருகே பஸ் சென்ற போது அதிர்ச்சியில் பஸ்சிலேயே வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை நடத்துனரும், டிரைவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் நடந்த விவரத்தை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற் கொண்ட போது வெற்றியை குறிக்கும் பெயரைக் கொண்ட போலீஸ்காரர் திருச்சியிலிருந்து வந்ததும், மாணவியிடம் சில்மிஷம் செய்ததும் தெரிய வந்தது. தகவலறிந்து மாணவியின் பெற்றோர் தொட்டியம் மருத்துவமனைக்கு வந்தனர். 

புகார் செய்வதென்றால் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லு மாறு தொட்டியம் போலீசார் அறிவுறுத்தினர். வேதனையுடன் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத் திற்கு புகார் செய்ய மாணவியுடன் வந்த பெற்றோரை அங்கிருந்த போலீசார், புகார் செய்தால் மாணவியின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என கட்ட பஞ்சாயத்து செய்து பெற்றோரையும், மாணவியையும் அனுப்பி விட்டனர்.

மைனர் பெண்ணிடம் போலீஸ்காரர் அத்து மீறி நடந்துள்ள இந்த செயல் திருச்சி மாவட்டத் தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மகளிர் அமைப்புகளிடம் கேட்ட போது இது தொடர்பாக முசிறி போலீசார் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். உடனடியாக அந்த போலீஸ்காரரை கைது செய்து மைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரிவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போலீசார் மீது வழக்கு தொடரவும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors

Universal Tiles Bazar


selvam aqua


Johnson's Engineers

Nalam Pasumaiyagam

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory