» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருத்து சுதந்திரத்திற்கு தி.மு.க எப்போதும் துணை நிற்கும்: மெர்சலுக்கு ஸ்டாலின் மறைமுக ஆதரவு

சனி 21, அக்டோபர் 2017 5:51:28 PM (IST)

கருத்து சுதந்திரத்திற்கு தி.மு.க எப்போதும் துணை நிற்கும்  என மெர்சல் திரைப்பட விவகாரத்தை குறித்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.

இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், " ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. பேச்சு, கருத்து சுதந்திரத்திற்கு தி.மு.க எப்போதும் துணை நிற்கும் ” என தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

selvakumarOct 21, 2017 - 09:19:29 PM | Posted IP 103.2*****

தினகரன் கருத்துக்கணிப்பு,,,,,,விஸ்வரூபம் சினிமா .....அப்பல்லாம் பார்த்தோமே

நான்Oct 21, 2017 - 08:02:46 PM | Posted IP 103.2*****

அதைத்தான் முதல்வன் படம் வரும்போது பார்த்தோமே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD
New Shape Tailorscrescentopticals

Joseph MarketingThoothukudi Business Directory