» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவமானம்: 5பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் - ஐகோர்ட் அதிருப்தி

புதன் 13, செப்டம்பர் 2017 3:27:47 PM (IST)

தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த 5பேருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவமானம் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போராட்டத்துக்குத் தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆசிரியர்கள் என்ன தொழிலாளர்கள் வர்க்கத்தினரா என்று கேள்வி எழுப்பினார். அரசியல் ஆதாயத்துக்காகவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படுகின்றன.  கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. 

கல்வி முறையை முன்னேற்றுவதில் உயர் நீதிமன்றம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது. எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியதைப் புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். 5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்” என்று தெரிவித்தார். 

ஆசிரியர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது  என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டால், ஆசிரியர்களே இழப்பீடு தர உத்தரவிட நேரிடும் என்றும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி அரசு வரும் 18-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

உண்மைSep 14, 2017 - 04:26:55 PM | Posted IP 122.1*****

இனிமேல் அனைத்து துறைக்கும் நீட் தேர்வு வைத்து தேர்வு செய்தல் வேண்டும்!

MAKKALSep 13, 2017 - 06:01:34 PM | Posted IP 59.93*****

TET , TRB தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள்தானே பாடம் நடத்தினார்கள் ?????????????????????????????????????????? அப்படினா TRB , TET எல்லாம் எதுக்கு ??????????????? நீட் தேர்வு எதற்கு ?????????????? MLA , MP ,மினிஸ்டர் எல்லாத்துக்கும் EXAM வையுங்க ??? JUDGE கணக்கு கூட சமயத்துல தப்பா போயிடுது ??????????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Pop Up Here


CSC Computer Education

Universal Tiles Bazar

selvam aqua

Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Johnson's Engineers



Thoothukudi Business Directory