» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எங்கள் ஸ்லீப்பர் செல்கள் யார் என நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும் : டிடிவி தினகரன்

புதன் 13, செப்டம்பர் 2017 2:49:32 PM (IST)

எங்களது ஸ்லீப்பர் செல்கள் யார் என நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

எடப்பாடி அணிக்கும் டிடிவி தினகரன் அணிக்கும் மோதல் முற்றியுள்ளது .இதனால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கர்நாடகா வில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். சென்னையில் தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வழக்கு போடுவோம் என்று காவல் துறையை ஏவி மிரட்டுகிறார்கள். நீதி மன்றத்தை அணுகி காவல் துறை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். பெரும்பான்மை பலத்தை அடைய முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார். தங்களுக்கு பல கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக எங்களது எம்எல்ஏக்கள் கூறுகின்றனர். 

கோரிக்கை மனு அளித்தபோது, 14ஆம் தேதி வரை காத்திருக்குமாறு ஆளுநர் கூறினார். ஸ்லீப்பன் செல்கள் எத்தனை பேர் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. 21 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது, நம்பிக்கை வாக்கெடுப்பில் எங் களது ஸ்லீப்பர் செல்கள் யார் என தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

உண்மைSep 13, 2017 - 03:57:25 PM | Posted IP 122.1*****

சுடலையிடம் கற்ற வாய்ச்சவடால்!

சுடலைSep 13, 2017 - 03:26:00 PM | Posted IP 125.1*****

அதான் பொது குழு மீட்டிங்கில் பார்த்தோமே டுபாக்கூர்

பெரியசாமிSep 13, 2017 - 02:59:37 PM | Posted IP 61.2.*****

இப்படியே வாய்ச்சவடால் பேசி காலமும் பொழுதும் போவதுதான் மிச்சம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory