» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவை வைரவிழாவில் கருணாநிதி கலந்து கொள்ளமாட்டார்: ஸ்டாலின்

வெள்ளி 19, மே 2017 5:20:42 PM (IST)

சட்டப்பேரவை வைரவிழாவில் திமுக தலைவர் கருணாநிதி நிச்சயமாகக் கலந்து கொள்ள மாட்டார் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை பதிலளித்திருக்கிறேன். திமுக தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டமன்ற பணிகளை பாராட்டி வைரவிழாவாகவும், அவரது பிறந்தநாளையும் இணைத்து மிகப்பெரிய விழாவாக, வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி கொண்டாட இருக்கிறோம்.

அதில் வட மாநிலங்களைச் சேர்ந்த, அகில இந்திய அளவிலான சில முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொள்வாரா, கலந்து கொள்ள மாட்டாரா என விவாதமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. நிச்சயமாக, உறுதியாக கருணாநிதி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஒருவேளை மருத்துவர்கள் அனுமதி தந்தால் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




crescentopticals






Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory