» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓபிஸ் அறிக்கை விட்டாரா இல்லை குறட்டை விட்டாரா?- மத்திய, மாநில அரசுகள் மீது டி.ராஜேந்தர் சாடல்
வியாழன் 12, ஜனவரி 2017 12:23:44 PM (IST)
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கடைசி நேரத்தில்தான் தமிழக அரசு முயற்சி எடுத்தது என்று டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கைவிட்டாரா இல்லை குறட்டை விட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து டி. ராஜேந்தர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை குறை கூறும் பாஜக, ஏன் ஜல்லிக்கட்டை நடத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் காலதாமதம்? தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறார்கள். தமிழர்களை கிள்ளுக் கீரையாக கருதுகிறார்கள்.
தீர்ப்பு ஏன் எழுத தாமதமாகிறது? ஏன் முன் கூட்டியே எழுத முடியாதா? காளை மாட்டை ஏன் காட்சிப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். அகற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை இல்லையா? அவசரச்சட்டம் கொண்டு வந்து நீக்காதது ஏன்? மத்திய அரசு ஏன் இத்தனை நாட்கள் காலம் கடத்தியது? கடைசி நேரம் காக்க வைத்திருந்துவிட்டு கழுத்தை அறுக்கும் வேலையை செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி அறிக்கை விட்டார். அவர் அறிக்கை விட்டாரா அல்லது குறட்டை விட்டாரா என்பது தெரியவில்லை.
இத்தனை எம்பிக்களை வைத்துள்ள அதிமுக இத்தனை நாள் வரை என்ன செய்தது? ஜல்லிக்கட்டு விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனை பச்சை தண்ணீர் ஊற்றி அணைக்க முடியாது. ஆக. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் போட்டிகளை தடுத்ததுபோல் சினிமாவையும் எதிர்ப்பீர்களா?: ஆர்.ஜே பாலாஜி கேள்வி
வியாழன் 19, ஏப்ரல் 2018 4:45:16 PM (IST)

செயின் பறிப்பு திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் பாராட்டு
வியாழன் 19, ஏப்ரல் 2018 4:13:39 PM (IST)

நிர்மலாதேவி விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: விசாரணை அதிகாரி
வியாழன் 19, ஏப்ரல் 2018 3:56:33 PM (IST)

எதற்காக ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் தெரிய வரும் : நடிகர் ஆனந்தராஜ் பேட்டி
வியாழன் 19, ஏப்ரல் 2018 3:42:45 PM (IST)

நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையை மறுப்பது நியாயமில்லை: தமிழிசை பேட்டி
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:31:31 PM (IST)

அடுத்து வரும் தேர்தலில் ஆன்மிக அரசியலே வெற்றி பெறும்: அர்ஜூன் சம்பத் நம்பிக்கை
வியாழன் 19, ஏப்ரல் 2018 10:42:52 AM (IST)
