» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜல்லிக்கட்டுக்குதான் தடை.. ஏறு தழுவுதல் விழாவை தமிழக அரசு நடத்த இல.கணேசன் யோசனை

புதன் 11, ஜனவரி 2017 10:49:11 AM (IST)

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஏறு தழுவுதல் விழாவை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று இல. கணேசன் கூறியுள்ளார்.

ராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்புக்கு காத்திருக்கிறோம். தீர்ப்பு எதிராக வந்தால் அடுத்தகட்ட நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கும். தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு பதிலாக ஏறு தழுவுதல் என்ற புதிய விழாவை அறிவித்து நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தான் தடை உள்ளது. ஏறு தழுவுதலுக்கு இல்லை.

எனவே தமிழக அரசு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஏறுதழுவுதலை நடத்தலாம்.விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொள்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். விவசாயிகளின் நலன் நிச்சயம் பாதுகாக்கப்படும். மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ஹா...ஹாJan 11, 2017 - 05:04:00 PM | Posted IP 85.15*****

தமிபி கணேசா............. தீர்ப்பு வரும் என்பது ஒரு கண்துடைப்பு. PETA இருக்கிறவரை தீர்ப்பு சாதகமா வராது கணேசா !!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads


Johnson's Engineers



Panchai Dairy

CSC Computer Education

New Shape Tailors

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

selvam aqua







Thoothukudi Business Directory