» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

ஸ்டெர்லைட்டை மூட கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் பங்கேற்பு

சிவராம் | வியாழன் 29, ஜூலை 2010 12:51:23 PM (IST)

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்பாளர் யூ.நடராஜன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தூத்துக்குடி நகர மக்களின் உடல் நலத்தையும், நகரத்தை மாசுபடுத்தியும் வரும் ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி வரும் ஆகஸ்ட் 21ம் தேதி தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் கலந்து கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கலந்து கொள்கிறார். மேலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் நடத்திய கலெக்டர் அலுவலக கதவு மூடும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தால் போலீசாரைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம், கடுமையான மின்வெட்டு, மனித கழிவு ஆலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.






 


மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 6:36:17 PM (IST)

சாத்தான்குளத்தில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:59:24 PM (IST)

ஸ்ரீவெங்கடேசபுரத்தில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி

கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:57:21 PM (IST)

Sponsored Ads