» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
Share

இந்திய கடலோர காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் வீராவில் கடலோர காவல் படையினர் கமாண்டன்ட் வர்கீஸ் தலைமையில் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று பகல் 12 மணியளவில் அப்போது தூத்துக்குடியில் இருந்து வட கிழக்கில், கீழக்கரையில் இருந்து 8 கடல் மைல் கிழக்கே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 விசைப்படகுகள் நிற்பதை அதிகாரிகள் கண்டனர்.
அவர்கள் அதனருகில் சென்றபோது அவை இலங்கையை சேர்ந்த படகுகள் என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் அந்த 3 படகுகளையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில் அந்த விசைப்படகுகளில் இருந்த 15 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கை நீர்கொழும்பைச் சார்ந்த சிங்கள மீனவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வந்த 3 விசைப்படகுகளையும் படகிலிருந்த 180 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களை தூத்துக்குடி தெர்மல் நகர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காற்றில் திசை மாறி இந்திய கடல் பகுதிக்குள் தெரியாமல் நுழைந்ததாக சிங்கள மீனவர்கள் தெரிவித்தனர்.
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் போலீசில் ஒப்படைப்பு
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 4:45:39 PM (IST)

இந்திய கடலோர காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் வீராவில் கடலோர காவல் படையினர் கமாண்டன்ட் வர்கீஸ் தலைமையில் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று பகல் 12 மணியளவில் அப்போது தூத்துக்குடியில் இருந்து வட கிழக்கில், கீழக்கரையில் இருந்து 8 கடல் மைல் கிழக்கே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 விசைப்படகுகள் நிற்பதை அதிகாரிகள் கண்டனர்.
அவர்கள் அதனருகில் சென்றபோது அவை இலங்கையை சேர்ந்த படகுகள் என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் அந்த 3 படகுகளையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில் அந்த விசைப்படகுகளில் இருந்த 15 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கை நீர்கொழும்பைச் சார்ந்த சிங்கள மீனவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வந்த 3 விசைப்படகுகளையும் படகிலிருந்த 180 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களை தூத்துக்குடி தெர்மல் நகர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காற்றில் திசை மாறி இந்திய கடல் பகுதிக்குள் தெரியாமல் நுழைந்ததாக சிங்கள மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே விபத்தில் அதிமுக பிரமுகரின் மகள் பலி: 3பேர் படுகாயம்!
வேல்குமார் | சனி 4, செப்டம்பர் 2010 6:17:27 PM (IST)

தூத்துக்குடியில் இலவச காஸ் அடுப்பு பணம் வசூல்: தி.மு.க. கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!
வேல்குமார் | சனி 4, செப்டம்பர் 2010 12:53:25 PM (IST)

கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து: கண்டக்டர் பலி; 9பேர் படுகாயம்!
சனி 4, செப்டம்பர் 2010 11:07:00 AM (IST)

அடிப்படை வசதியின்றி ஒரு சிலோன் காலனி காலியாகிறது: பாவமா? பரிதாமா?
சனி 4, செப்டம்பர் 2010 10:19:20 AM (IST)

தூத்துக்குடியில் கலைஞர் காப்பீடு திட்ட பயனாளிகளின் நலம் விசாரிக்கும் விழா
சனி 4, செப்டம்பர் 2010 9:14:26 AM (IST)

தூத்துக்குடியில் இளைஞர் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட தி.மு.க. செயலாளர் தகவல்!
சனி 4, செப்டம்பர் 2010 9:14:08 AM (IST)

அ.தி.மு.க. சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா: செங்கோட்டையன் பங்கேற்பு
சனி 4, செப்டம்பர் 2010 9:13:53 AM (IST)

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பணிகள் 14ம் தேதி வரை நிறுத்திவைப்பு
சனி 4, செப்டம்பர் 2010 9:13:15 AM (IST)

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை!
ஆர்.முருகன் | வெள்ளி 3, செப்டம்பர் 2010 8:42:32 PM (IST)
ரோட்டை வழிமறித்து கல்யாண பந்தலா? கொதிக்கும் தூத்துக்குடி மக்கள்
வெள்ளி 3, செப்டம்பர் 2010 4:50:31 PM (IST)
தூத்துக்குடியில் ஸ்ரீராம் பைனான்ஸ், பேபி எலக்ட்ரானிக்ஸ் சார்பில் இன்வெர்ட்டர் லோன்மேளா
ஆர்.முருகன் | வெள்ளி 3, செப்டம்பர் 2010 3:59:26 PM (IST)