» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 12:55:46 PM (IST)



தூத்துக்குடி காய்கனி மார்க்கட் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்றம் சார்பில் காமராஜர் 108வது பிறந்த நாள் விழா 1000 பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கும் விழா மார்க்கட் வளாகத்தில் நடந்தது.

தூத்துக்குடி காய்கனி மார்க்கட் தலைவர் சி.த.சுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின் முன்னிலை வகித்தார். சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற தூத்துக்குடி ஒன்றிய தலைவர் எஸ்.டி.எஸ்.மணிராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு 1000 பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

விழாவில் மார்க்கட் செயலாளர் டி.தங்கமணி நாடார், பொருளாளர் பி.டி.பரமசிவன், துணைத்தலைவர் ஆர்.பொன்ராஜ், நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.அல்போன்ஸ் மற்றும் என்.வி.பூபதி நாடார், என்.ராஜபாண்டி, பி.ஞானமுத்து, பி.ஜெயம், த.தங்கதுரை, வி.ஏ.எஸ்.செல்வரேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மார்க்கட் மேலாளர் எஸ்.பி.நியூட்டன் நன்றி கூறினார்.


மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 6:36:17 PM (IST)

சாத்தான்குளத்தில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:59:24 PM (IST)

ஸ்ரீவெங்கடேசபுரத்தில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி

கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:57:21 PM (IST)

Sponsored Ads