» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
Share
கலெக்டர் அலுவலக கதவை மூடி போராட்டம் நடத்திய 55 பேர் மீது வழக்கு
புதன் 28, ஜூலை 2010 9:20:26 AM (IST)
தனியார் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கதவை மூடி போராட்டம் நடத்தி, மனுவை தீயிட்டு எரித்தது தொடர்பாக, 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியிலுள்ள தனியாருக்கு சொந்தமான "ஸ்டெர்லைட்' தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பொதுமக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள அந்த ஆலையை உடனடியாக மூடவேண்டுமென வலியுறுத்தி, ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர், ம.தி.மு.க., மாவட்ட செயலர் ஜோயல் தலைமையில் நேற்று முன்தினம் மதியம், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவு வாயில் கதவை மூடி போராட்டம் நடத்தினர். கலெக்டர் கோ.பிரகாஷிடம் தர வைத்திருந்த மனுக்களை தீயிட்டு எரித்தனர். இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவன், சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜோயல், நாம் தமிழ் கட்சி மாவட்ட செயலர் பிரபு, வக்கீல்கள் அதிசயகுமார், ராமச்சந்திரன், பாத்திமாபாபு மற்றும் 50 பேர் மீது சட்டவிரோதமாக கூட்டமாக கூடி வழிமறித்தல்(147,342), மனுவை தீயிட்டு எரித்தல்(285), அரசு அலுவலக கதவுகளை மூடிபணி செய்யவிடாமல் தடுத்தல்(353), கொலை மிரட்டல் விடுத்தல் (506(1)) ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!
வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 6:36:17 PM (IST)

பள்ளி குழந்தைகளில் 70 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிப்பு: பயிற்சி முகாமில் பகீர் தகவல்!
வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 4:19:22 PM (IST)
தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தானியங்கி சில்லறை வழங்கும் இயந்திரம்
ஆர்.முருகன் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 4:18:17 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் மீண்டும் மாயமானார்
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 3:53:28 PM (IST)

வேன் மோதி தனியார் விடுதி உதவியாளர் பலி: வேன் டிரைவருக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 3:46:21 PM (IST)

தூத்துக்குடியில் வேலை நிறுத்தம்: வங்கிகள் இயங்கின... பொதுமக்களுக்கு பாதிப்பில்லை!
வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 3:17:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 இடங்களில் மறியல்: ஆயிரக்கனக்கானோர் கைது!
வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 11:46:04 AM (IST)

அரோகரா கோஷங்கள் விண்ணதிர... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவனித் தேரோட்டம்
பி. கந்தன் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 11:03:24 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டிரைக்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 7:24:11 AM (IST)

அநநிய ஊடுறுவலைத் தடுக்க தூத்துக்குடியில் மேலும் 3 விமான தளங்கள்
பி. கந்தன் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 7:23:39 AM (IST)

தூத்துக்குடி அருகே தந்தை கல்லால் அடித்து கொலை: மகன் கைது!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 7:23:22 AM (IST)

சாத்தான்குளத்தில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:59:24 PM (IST)

