» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்!!

புதன் 24, ஏப்ரல் 2013 11:06:24 AM (IST)தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு சங்கரராமேசுவரர் பாகம்பிரியாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் தீபாராதனை, வீதியுலா நடைபெற்றன.சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலகலமாக நடந்தது. 

தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் திருத்தேர் பவனி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் ஆகியோர் வீற்றிருந்தனர். பின்னர் காலை 10.05 மணிக்கு பக்தர்களால் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். கீழரதவீதியிலிருந்து தொடங்கி தெற்கு ரதவீதி, மேற்குரதவீதி, வடக்குரதவீதி வழியாக மீண்டும் தேர் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் யானைகள், ஒட்டகங்கள், நாட்டியக் குதிரைகளின் அணிவகுப்பு, கிளாரினெட், நையாண்டி மேளம், களியல் ஆட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், செண்டை மேள கலைஞர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றது. ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ, ஓம் முருகா, ஓம்சக்தி பராசக்தி, ஒம்காளி ஜெய்காளி கோஷங்கள் எழுப்பியவாறு பக்தி பரவசத்துடன் வலம் வந்தனர். 

இதில், கோவில் இணை ஆனையர் வீரராகவன், சிவன் கோவில் தக்கார் கசன்காத்த பெருமாள், செயல் அலுவலர் வே.ராஜேந்திரன், தேரோட்ட பவனி குழுத்தலைவர் ப.சந்திரசேகர், உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் ராஜ், செல்வம் உட்பட கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தேரோட்டத்தை காணவந்த பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், குளிர்பானங்கள் பல்வேறு நிறுவனங்கள் சார்பில வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

சங்கர்புதன் 24, ஏப்ரல் 2013 - 06:56:44 PM

ஓம் நமசிவாய ஓம் சிவசக்தி துணை

ச.செந்தில்புதன் 24, ஏப்ரல் 2013 - 03:45:42 PM

ஓம் நாம சிவாய

singamபுதன் 24, ஏப்ரல் 2013 - 03:19:11 PM

சிறப்பாக செழிப்பாக மக்கள் அனைவரும் வாழ கடவுளை வேண்டுகிறேன் ,இந்த நாள் போல் அனைத்து நாட்களும் இவர்கள் சந்தோசமாக இருக்கவேண்டும்

பாலாபுதன் 24, ஏப்ரல் 2013 - 11:29:53 AM

மக்கள் அனைவரும் சிவன் அம்பாள் அருள் பெற்று வளமோடு வாழட்டும்

மக்கள்புதன் 24, ஏப்ரல் 2013 - 11:12:18 AM

மக்கள் அனைவரும் சிவன் அம்பாள் அருள் பெற்று வளமோடு வாழட்டும்! ஓம் நமசிவாய!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Thoothukudi Business Directory